இலங்கை நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ் பெண் நியமனம்!

இலங்கை நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி மதுமதி வசந்தகுமார், இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு தரத்தை அண்மையில் பூர்த்தி செய்த நிலையில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அதிகாரி ஆரம்பத்தில், உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என பல பதவிகளை வகித்தவர் ஆவார்.

இந்த நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக கடமை வகித்து வந்த நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply