விபத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை!

பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்ததோடு, அவரது கணவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பொகுணுவிட ஹங்ச உயன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுமனாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மோட்டார் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பதுடன், மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும், முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply