கைவிடப்பட்ட வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்- தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து நாளை முன்னெடுக்கப்படவிருந்த வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து இருந்தோம்.

ஆனால் தற்போது இலங்கை போக்குவரத்து சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் இனிவருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply