‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில் இன்று முதல் ஆரம்பம்!

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவையை இலங்கையில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார்.

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்பதால், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply