சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்டதன் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாரபட்சமற்ற ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
