ராகம, படுவத்தை பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து, முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி உபுல்’ என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
