சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவது,
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர்.
இந்தவேளையில் இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டவே உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த இளைஞன் உயிரிழந்ததையடுத்து அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகியதால் சுன்னாகம் காவல்துறையினர் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
