இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேகநபர்களும் நேற்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply