தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை- நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

வவுனியா நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் உரையாற்றுகையில், அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டியதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், மாநகர சபை எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 10 இற்கும் அதற்குக் கீழும் உள்ள மாணவர்களுக்கான தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply