பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்- சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவாலும், அலட்சியமாக வாகனம் ஓட்டியமையுமே விபத்துக்குக் காரணம் என கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றிருந்தது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு குறித்த பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply