‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு!

கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (4) அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குறித்த திட்டம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

சமூகங்களை அதிகாரமளிப்பதையும் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட “பிரஜா சக்தி” தேசிய திட்டமானது, சமூக அதிகாரமளிப்புக்கான பன்முக அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதுடன், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான கட்டமைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பில் வலுவான கவனம் செலுத்துகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply