யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பிரதேசம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனித எலும்புகள் காணப்படலாம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, நேற்றுமுன்தினம் (ஜூன் 2) முதல் அந்த பகுதியிலும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வில் 40 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் குறைந்தது பத்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாக அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதைகுழி அகழ்வாய்வாளர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் சிறுவர்களுடையது என நம்பப்படும் 2 எலும்புக்கூடுகளை இன்று கண்டறிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அகழ்வுப் பணியை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
