மோட்டார் சைக்கிள் விபத்து- 17 வயது இளைஞன் பலி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாலையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply