சாலைகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியதுடன், இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இதன் காரணத்தினால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து வாகனங்களையும், மக்களையும் திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply