யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
