ராகம, கந்தானை, ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் செயல்முறையின் மற்றுமொரு அத்தியாயமாக இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவினரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
