இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார்.
பிரட்மன் வீரக்கோன் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய அதேவேளை, இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
பிரட்மேன் வீரக்கோன் களுத்துறை ஹோலி கிராஸ் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை மேற்கொண்டதுடன், பின்னர் குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் (MA) பட்டத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
