முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு கொலை மிரட்டல்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கடந்த 5 ஆம் திகதி முதல் டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply