நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இன்று (07) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3,200 வௌிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
