ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால், விற்பனை அதிகரித்து தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தேங்காயின் விலை தற்போது 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தேங்காயின் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
