தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டவை என்று தெரிவிக்கப்படுவதோடு, இதன் பெறுமதி 20 மில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
