வெளிநாட்டவரிடம் அத்துமீறிய நபர்கள்- ஒருவர் கைது!

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில் வெளிநாட்டவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற விருந்தில் வெளிநாட்டு பெண் ஒருவரை உள்நாட்டவர் ஒருவர் விரும்பத்தகாத முறையில் தொட முயன்ற வேளையில், குறித்த நபரை வெளிநாட்டுப் பெண்ணின் கணவர் எச்சரித்துள்ளார்.

இதன்போது குறித்த வெளிநாட்டவரை சந்தேகநபர்கள் இருவர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி காவல்துறையினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் ஜூலை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply