பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை- அமைச்சர் ஆனந்த விஜேபால!

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5000 கீழ்நிலை ​பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply