இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் இளைஞன் ஒருவன் மோதுண்டு உயிரிழந்துள்ளான்.
கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த 23 வயதுடைய எஸ். நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புகையிரத கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணித்தவரின் சடலம் மோதிய புகையிரதத்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
