யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மாணவியொருவர் இரத்தப்புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுகந்தன் பூமிகா என்ற என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
