யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும்- எம்.பி மனோ கணேசன்!

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவம் – அரச பயங்கரவாதம் – பேரினவாத அடக்குமுறை – ஏதேச்சாதிகாரம், போர் வெற்றி என்பவற்றால் நடந்ததுதான் செம்மணி புதைகுழி. அங்கே இருப்பது நம்மவர்களின் எலும்புக்கூடுகள்.

அப்பாவி மக்களை கொலை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற செயல்கள் ஏற்கமுடியாதவை. இவைதான் மனித உரிமை மீறல். இதனை அமைச்சர் சந்திரசேகரன் மறந்துவிடக்கூடாது.

இனப்பிரச்சினை காரணமாகவே போர் நடந்தது. அதிகாரப் பகிர்வுக்காக தந்தை செல்வா முதல் பிரபாகரன்வரை போராட்டம் நடைபெற்றது. தற்போதும் அப்போராட்டம் இழுபட்டு செல்கின்றது.

யுத்தம் முடிந்தாலும் – யுத்தம் ஏற்படுவதற்கு வழிசமைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, அதிகாரப்பகிர்வின் அவசியத்துவத்தை அநுர, ரில்வின் சில்வாவிடம் சந்திரசேகரன் எடுத்துரைக்க வேண்டும் – என்று மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply