யாழ். செம்மணியில் தோண்ட தோண்ட வெளிப்படும் மனித எச்சங்கள்!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான நேற்றைய தினம் (8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறுவர்கள், பெண்கள் என பல எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் நீதியானதும், சர்வதேச ரீதியிலானதுமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பாக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply