இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
முன்னதாக இலங்கை மீது 44 சதவீத வரி அமெரிக்காவால் விதிக்கப்பட்டது.
இந்த முறை அமெரிக்கா அறிவித்த வரி விகிதம் முன்னர் அறிவிக்கப்பட்ட வரி விகிதத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (09) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
