எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டில் 8,355 தானசாலைகள் பதிவு!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றையதினம் நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தான சாலைகளை கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி சுகாதாரப் பாதுகாப்பான முறையில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவித்துள்ளார்.

அத்துடன் இன்று முழுவதும் தானசாலைகள் ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், இதற்காக சுமார் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply