யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
1 கிலோ கிராம் மீன் வெட்டுவதற்கு 50 ரூபாய்,
1 கிலோ கிராம் நண்டு வெட்டுவதற்கு 50 ரூபாய்,
1 கிலோ கணவாய் வெட்டுவதற்கு 100 ரூபாய்,
1 கிலோ கிராம் சுறா மீன் வெட்டுவதற்கு 100 ரூபாய்,
1 கிலோ கிராம் திருக்கை வெட்டுவதற்கு 50 ரூபாய் ,
1 கிலோ கிராம் பெரிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 100 ரூபாய்,
1 கிலோ கிராம் சிறிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் எதுவும் அறவிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமாகக் கட்டணங்கள் அறவிடப்படுமாயின் 021 2222700 அல்லது 0212212178 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலதிக கட்டணம் அறவிடப்பட்டமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், உரியவர்களுக்கு எதிராகப் பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
