ஹோமாகம பகுதியில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள்
காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை வேறொரு இடத்தில் கொலை செய்துவிட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் (ஹோமாகம கிளை வீதி) வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளை நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
