எசல பௌர்ணமி தினத்தில் யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று (10) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் காணியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply