வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் மகாநாடும், வடகரோலினா ஆளுநரின் பிரகடனமும்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ் மகாநாடு வடகரோலினாவின் தலைநகரில் நடைபெறுவதையிட்டு, இம் மாதம் தமிழரின் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வடகரோலினா மாநில அரசு 2019ஆம் ஆண்டிலிருந்து தை மாதத்தைத் தமிழரின் மொழி மற்றும் காலசார மாதமாகப் பிரகடனம் செய்து வந்துள்ளது.

அதனை ஆளுநரிடமிருந்து பெறுவதற்கு முன்னின்று உழைத்தவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் துறைத் தலைவருமாகிய கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் ஆவார்.

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் அவர்களுக்கு முன்னர் “தமிழ் மரபு” விருதை வடகரோலினா தமிழ் மக்கள் வழங்கிக் கௌரவித்தனர். இம் முறை வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவைத் தலைவர் உயர்திரு விஜய் மணிவேல் அவர்கள், கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் அவர்களைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன் ஆளுனரின் பிரகடனத்தையும் அவரிடம் இருந்து மேடையில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.

இந்த மாகாநாட்டில் உலகெங்கிலும் இருந்து 4000 தமிழர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மகாநாட்டின் இறுதி நாளான 5ஆம் திகதி இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இமான் அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply