நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலை, வன்முறைகளுக்கும் நீதிகோரி போராட்டம்!

நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும், அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராக நீதிகோரி இன்றையதினம் யாழில் நடைபவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடைபவணியை வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது யாழ்ப்பாணம் நுழைவாயில் வரை நடைபெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள்,

எந்த வன்முறையாலும் எங்களை ஒடுக்க முடியாது,
வன்முறை நிறைவுக்கு கொண்டு வருவோம்,
மண்ணுக்கு கீழ் கொலைகளை புதைக்காதீர்கள்,
வாழும் உரிமையை அழிக்காதீர்கள்,
நியாயம் கோருவோம்; பயத்தில் வாழ மாட்டோம்,
நியாயம் கோராத வன்முறைகளும் கொலைகளும் மக்கள் பேரெழச்சியாக மாறும்,
கொலைகளுக்கு நீதி வேண்டும்’ மன்னிப்பு அல்ல
போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நடைபயணத்தில் பெருமளவான மக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply