பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 250 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply