மாலமுல்ல பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் காயம்!

ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த நபரை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர் பற்றிய தகவலோ இன்னும் வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.

இந்தநிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply