இன்றைய நாடாளுமன்ற அமர்வில், சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டி அர்ச்சுனா எம்.பி கடுமையாக கூச்சலிட்ட நிலையில் இன்றை (11) சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறி இன்று நாடாளுமன்றில் சர்ச்சை ஏற்பட்டது.
குறித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் கூறுவதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து சீற்றமடைந்த அர்ச்சுனா எம்.பி சபையில் கடும்தொனியில் சத்தமிட்டார்.
எனினும் தொடர்ச்சியாக பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து அவர் மேலும் அதிகமாக கடும்தொனியில் சத்தமிட்டார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சபையில் பேசுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன்போது கொள்கலன் தொடர்பான விடயங்களை தான் புலனாய்வுப்பிரிவிடம் 5 மணித்தியாலங்கள் செலவிட்டு கூறியதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
