நாட்டின் நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை- சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார!

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் தொடர்பான உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது. அதன்படியே செய்கின்றோம். இதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. விரைவில் அது ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர்மீது நம்பிக்கை இல்லை என்பதால் நாம் இதனை செய்யவில்லை. அவரை நம்புகின்றோம்.

வெளிநாட்டு ஒத்துழைப்பு பெறுவதாக இருந்தால் பெறமுடியும். ஆனால் எமது நாட்டில் சி.ஐ.டியினருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும். வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. எமது நீதிபதிகளால் அவற்றை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்– எனவும் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply