யாழ். செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை- சி.வி.கே.சிவஞானம்!

யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

யுத்த காலத்தில் செம்மணி பகுதியில் இராணுவத்தினர் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது.

எனவே செம்மணி மனிதப் புதை குழியை சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.

அநீதிக்கு உட்பட்டவர்களுக்கும், அவர்களது கும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்றால் அதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும்- என சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply