கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தபால் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கறுப்பையா ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மது போதையில் இருந்த காரணத்தால் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply