அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே, கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், 40 முதல் 45 வயத்துக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட பெண் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply