ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், துவிச்சக்கரவண்டியில் சென்றவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
பரவர்தனஓய மற்றும் ஹசலக பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 73 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
