கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ஜகத் மனுவர்ண!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply