இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில், மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
தபால் துறையில் 2016ஆம் ஆண்டு முதல் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறாமையே இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் எனது தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, தற்போதைய ஊழியர்கள் மீது அதிக வேலைப்பளு மற்றும் மேலதிக நேரப் பணி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவிக்கின்றது.
எனவே ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
