பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள், நிறுவன பராமரிப்பு மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply