சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்!

நாட்டிற்குள் சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகளினால், கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் நடாத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.

குறித்த பெண்களில் ஆறு தாய் நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்குவர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply