தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு!

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டமையால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply