நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் நபர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சந்தேகநபர் மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், பயணப் பையிலும் மறைத்து வைத்து தங்கத்தை எடுத்து வந்துள்ளார்.
நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் (195 தங்க பிஸ்கட்களும், 13 கிலோ தங்க நகைகளும்) தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
