தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 6ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்தி பேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன.
அதனையடுத்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை என லிந்துலை பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்திருந்தார்.
தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 6ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கொண்டு வந்த நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.
