‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் கையொப்பமிடும் நிகழ்வு!

மன்னார் பஜார் பகுதியில் இன்றையதினம் ‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு சம உரிமை இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது,
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு,
இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்,
அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply